உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 10 தொகுதிகளுக்கு மின்னணு இயந்திரம் :திருவள்ளூர் கலெக்டர் சரிபார்ப்பு

10 தொகுதிகளுக்கு மின்னணு இயந்திரம் :திருவள்ளூர் கலெக்டர் சரிபார்ப்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், லோக்சபா தேர்தலுக்கான பணியில் மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் தயாராகி வருகிறது. 10 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று மின்னணு இயந்திரம் அனுப்பி வைக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஓட்டுப் பதிவிற்காக, 9,119 ஓட்டுப்பதிவு இயந்திரம், 4,821 கட்டுப்பாட்டு கருவி மற்றும், 5,333 யாருக்கு ஓட்டு அளித்தோம் என்பதை காட்டும் கருவி பயன்படுத்த தயார் நிலையில் உள்ளது. மாவட்டத்திற்கு உட்பட்ட 10 சட்டசபை தொகுதிகளுக்கும், மின்னணு ஓட்டுப்பதிவு பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடந்தது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில், அனைத்து அரசியல் கட்சிகளின் முகவர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்றனர். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் இருப்பு அறையில் இருந்து, அந்தந்த சட்டசபை தொகுதிகளின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் மின்னனு இயந்திரம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை