உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / முதியவரை வெட்டி ரூ.50 லட்சம் வழிப்பறி

முதியவரை வெட்டி ரூ.50 லட்சம் வழிப்பறி

மண்ணடி:சென்னை, ஏழுகிணறு, அண்ணா தெருவைச் சேர்ந்தவர் நவாஸ்கான், 65. இவர், பிராட்வே, ஈவ்னிங் பஜாரில் மொபைல் போன் கடை நடத்தி வருகிறார்.இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு கடையில் இருந்து, 50 லட்சம் ரூபாயுடன் பைக்கில் வீட்டிற்கு சென்றார். மண்ணடி, லிங்கச்செட்டி தெரு வழியாக சென்றபோது, பைக்கில் வந்த ஆறு பேர் கும்பல் அவரை வழிமறித்தது.திடீரென கத்தியால் நவாஸ்கானின் கழுத்து, கையில் வெட்டி, பணத்தை கொள்ளையடித்து சென்றது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து வடக்கு கடற்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ