உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாமனார் - மருமகன் சண்டை நான்கு பேருக்கு கத்திக்குத்து

மாமனார் - மருமகன் சண்டை நான்கு பேருக்கு கத்திக்குத்து

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை அடுத்த கொடிவலசா காலனியைச் சேர்ந்தவர் ரோஜா, 28. இவருக்கும், நொச்சிலி காலனியைச் சேர்ந்த ஞானராஜ், 30, என்பவருக்கும், 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில், தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில், ரோஜா அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.அவரை அழைத்து செல்ல ஞானராஜ், நேற்று முன்தினம் கொடிவலசா காலனியில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்தார். அப்போது, ஞானராஜிக்கும், அவரது மாமனார் பாபுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின், இருவரும் கத்தியால் தாக்கிக் கொண்டனர். பாபு தாக்கியதில், ஞானராஜ் காயம் அடைந்தார்.அதேபோல், ஞானராஜ் தாக்கியதில் பாபு மற்றும் அவரது மனைவி அமுலு, இளைய மகள் சாலம்மாள் உள்ளிட்ட மூன்று பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த நான்கு பேரும், திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து இரு தரப்பினரும், பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்படி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ