உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி காவடி பக்தர்களுக்கு கட்டணம் ரத்து: அமைச்சர் தகவல்

திருத்தணி காவடி பக்தர்களுக்கு கட்டணம் ரத்து: அமைச்சர் தகவல்

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், வரும், 27 ம் தேதி முதல், 31ம் தேதி வரை ஆடிக்கிருத்திகை விழா மற்றும் மூன்று நாள் தெப்பத்திருவிழா நடக்கிறது. இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பு கூட்டம் மாலை மலைக்கோவிலில் காவடி மண்டபத்தில், மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடந்தது. ஹிந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று பேசியதாவது: பக்தர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை, குளியல் போன்ற அடிப்படை வசதிகள் கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. மலைக்கோவில் மற்றும் தேவஸ்தான விடுதிகள் ஆகிய இடங்களில், 160 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.ஒரு நாளைக்கு, 50 ஆயிரம் பேருக்கு அன்னதானம், 15 இடங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்படும். ஆடிக்கிருத்திகை விழாவிற்கு காவடிகள் கொண்டு வரும் பக்தர்களிடம் காவடி கட்டணம் ரத்து செய்வதுடன், 200 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட், இந்தாண்டு, 100 ரூபாயாக குறைக்கப்படும்.முருகன் கோவிலுக்கு மாற்று மலைப்பாதைக்கு நிலம் கையகப்படுத்தி விரைவில் அமைக்கப்படும். போக்குவரத்து நெரிசல் மற்றும் பக்தர்கள் நெரிசல் இல்லாமல் மூலவரை தரிசிக்கவும் காவடிகள் செலுத்தவும், கூடுதல் போலீசார் நியமித்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை