உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை

தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த குருவிமேடு பகுதியில், ரிலையன்ஸ் எண்ணெய் நிறுவனத்தின், பெட்ரோலிய பொருட்கள் சேமிப்பு கிடங்கு அமைந்து உள்ளது.இங்கு நேற்று, பொன்னேரி சப்-கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த் தலைமையில், அவசர கால ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.எண்ணெய் நிறுவனத்தில் திடீரென ஏற்படும் தீ விபத்து மற்றும் எரிவாயு கசிவு நேரங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தான ஒத்திகை நடந்தது.ஒத்திகை நிகழ்ச்சி குறித்து அருகில் உள்ள கிராமங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது. அபாய மணி ஒலிக்கப்பட்டு, அவசர அவசரமாக ஊழியர்களை வெளியேற்றுவது, தீயணைப்பு வாகனங்கள் வரவழைப்பது, எரிவாயு சேமிப்பு தொட்டிகளின் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பது உள்ளிட்டவை தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டன.அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஒத்திகை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை