உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையோரம் குவியும் குப்பை திருமழிசை பகுதிவாசிகள் அவதி

சாலையோரம் குவியும் குப்பை திருமழிசை பகுதிவாசிகள் அவதி

திருவள்ளூர்,:திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது திருமழிசை பேரூராட்சி.இப்பகுதியில் நெடுஞ்சாலையோரம் பழைய பொருட்கள் கடையில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக், இரும்பு போன்ற கழிவு பொருட்கள் கடை உள்ளது. இந்த கடை முன் சாலையோரம் குப்பை குவிந்து வருகிறது.பழைய இரும்புக்கடையில் உள்ள கழிவு பொருட்களும் குப்பையுடன் சேர்ந்து குவிந்து வருகிறது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தில் இவ்வழியே வாகனங்களில் செல்வோர் மற்றும் பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சாலையோரம் குப்பையில் கால்நடைகள் இரை தேடும் போது சாலையில் மிரண்டு ஓடுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள், பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை