| ADDED : மே 03, 2024 08:46 PM
ஊத்துக்கோட்டை:ஆந்திர மாநிலத்தில் இருந்து ஊத்துக்கோட்டை வழியே, குட்கா புகையிலைப் பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. ஊத்துக்கோட்டை போலீசார் அண்ணாதுரை சிலை அருகில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த பைக்கை போலீசார் மடக்கினர். பைக்கில் வந்தவரை விசாரித்ததில், அவர் சென்னை அயப்பாக்கம் செந்தில்குமார், 39, என்பது தெரியவந்தது. அவரை சோதனை செய்ததில், அவரிடம் ஹான்ஸ் 1,110, சுவாகட் 150, விமல் 3,420 பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் செந்தில்குமாரை, ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.