உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பூனிமாங்காடில் புதிய வகுப்பறை கட்டடம் திறப்பு

பூனிமாங்காடில் புதிய வகுப்பறை கட்டடம் திறப்பு

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம் பூனிமாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ - -- -மாணவியர் படித்து வருகின்றனர். மாணவர்கள் போதிய வகுப்பறைகள் இல்லாததால் கடும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன் மாணவர்கள் நலன்கருதி நபார்டு வங்கியின் மூலம், 42.36 லட்சம் ரூபாயில் இரண்டு வகுப்பறை கட்டட பணி துவங்கியது. வகுப்பறை கட்டடம் பணிகள் முடிந்த நிலையில் நேற்று முன்தினம் வகுப்பறை கட்டடம் திறப்பு நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி கமலநாதன் தலைமை வகித்தார். இதில் திருத்தணி தி.மு.க.,- எம்.எல்.ஏ.,எஸ்.சந்திரன் பங்கேற்று, இரு வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்து பயன்பாட்டிற்கு விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை