உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சோளிங்கர் ரயில் நிலையத்திற்கு கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்

சோளிங்கர் ரயில் நிலையத்திற்கு கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில். 108 திவ்யதேசங்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த மலைக்கோவிலுக்கு, 1305 படிகள் கொண்ட படி வழி உள்ளது. மூத்த பக்தர்களின் வசதிக்காக, கடந்த மார்ச் 8 ம் தேதி, மலைக்கோவிலுக்கு ரோப்கார் வசதி ஏற்படுத்தப்பட்டது. ரோப்கார் வசதி ஏற்படுத்தப்பட்ட பின், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வர துவங்கியுள்ளனர். கொண்டபாளையத்திற்கு வேலுார் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்தும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்தும் சோளிங்கர் - பாணாவரம் ரயில் நிலையத்திற்கு பக்தர்கள் வருகின்றனர்.சோளிங்கர் ரயில் நிலையம், சோளிங்கர் நகரில் இருந்து, 16 கி.மீ., தொலைவில் உள்ள பாணாவரம் கிராமத்தில் அமைந்துள்ளது. பாணாவரத்தில் இருந்து சோளிங்கருக்கு பேருந்து வசதி போதுமான அளவில் இல்லை. பாணாவரத்தில் இருந்து சோளிங்கருக்கு இரண்டு அரசு நகர பேருந்துகள் மற்றும் ஆறு தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மார்க்கத்தில் ஷே ர் ஆட்டோக்களும் இயக்கப்பட்டு வருகின்றன. மலைக்கோவிலுக்கு ரயில் மார்க்கமாக குடும்பத்தினருடன் வரும் பக்தர்களின் வசதிக்காக, இந்த மார்க்கத்தில் அதிகளவில் அரசு பேருந்துகள் இயக்க நடவடக்கை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தமிழ்வேள்
ஜூன் 24, 2024 11:50

சோளிங்கருக்கு சென்னை -வேலூர் சாலையில் காவேரிப்பாக்கத்திலிருந்து பாணாவரம் வழியாக இணைப்பு மாநில நெடுஞ்சாலை உள்ளது ..பேருந்துகள் குறைவு. காவேரிப்பாக்கம் அல்லது வாலாஜா பேட்டையிலிருந்து -பாணாவரம் வழியாக சோளிங்கர் வரை அரசு பஸ் போக்குவரத்து அதிக அளவில் இயக்கப்பட்டால் நல்லது ..சோளிங்கர் -அரக்கோணம் -திருவள்ளூர் ரயில் நிலையம் வரையிலான பேருந்து சேவையும் வரவேற்கத்தக்கதே ...


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி