உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வீடு கட்டும் பயனாளிகளுக்கு ஆணை வழங்கல்

வீடு கட்டும் பயனாளிகளுக்கு ஆணை வழங்கல்

திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகளில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2024 - -25ம் ஆண்டில், மொத்தம் 74 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.ஒவ்வொருவருக்கும், தலா 3 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடுகள் கட்ட, மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.நேற்று திருத்தணி எம்.எல்.ஏ., அலுவலகத்தில், கனவு இல்லம் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள், வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில், ஒன்றிய நிர்வாக மேலாளர் கிரிராஜ் தலைமை வகித்தார். திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கினார்.மேலும், பழுதடைந்த வீடுகள் சீரமைப்பதற்காக, 14 பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. இதில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை