உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர் கூட்டுறவு வங்கியில் ரூ.56.28 லட்சம் கடன் உதவி

திருவள்ளூர் கூட்டுறவு வங்கியில் ரூ.56.28 லட்சம் கடன் உதவி

திருவள்ளூர்:காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் திருவள்ளூர் கிளையில் ரூ.56.25 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டது.காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் திருவள்ளூர் கிளையில் வங்கி கடன் வழங்கும் விழா மண்டல இணைப்பதிவாளர் சண்முகவள்ளி, துணைப்பதிவாளர் ரவி தலைமையில் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி துணைப்பதிவாளர் வெங்கட்ராமன், துணை பொது மேலாளர் சசிக்குமார் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளரும், மேலாண்மை இயக்குனருமான சிவமலர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 9 திருநங்கைகளுக்கு தனி நபர் கடனாக தலா 50,000 வீதம் 4.50 லட்சம், 3 மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 41 பேருக்கு 25.03 லட்சம், 2 அரசு ஊழியர்களுக்கு சம்பளக் கடனாக 14 லட்சம்; 2 விதவைகளுக்கு 1 லட்சம்.கணவரால் கைவிடப்பட்ட மகளிர் கடன் ஒரு நபருக்கு 50,000 ரூபாய் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு 75,000 நாட்டுபுற கலைஞர்கள் கடன் 50,000 வீதம் 21 பேருக்கு 10.50 லட்சம் ரூபாய் என என மொத்தம் 56.28 லட்சம் ரூபாய் பொருளாதார மேம்பாட்டுக் கடன் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ