உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வாலிபரை தாக்கிய லாரி ஓட்டுனர் கைது

வாலிபரை தாக்கிய லாரி ஓட்டுனர் கைது

கடம்பத்துார்:ஸ்ரீபெரும்புதுார் அடுத்த வெங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னராசு, 30. துரித உணவு கடையில் மாஸ்டராக பணிபுரிந்து வரும் இவர், நேற்று முன்தினம் தனது டி.வி.எஸ். இரு சக்கர வாகனத்தில் உளுந்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டாடா டாரஸ் லாரி, இரு சக்கர வாகனம் மீது மோதுவது போல் வந்தது. இதனால் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் லாரி ஓட்டுனர், சின்னராசை இரும்பு ராடால் தாக்கி மிரட்டல் விடுத்தார். இதில் படுகாயமடைந்த சின்னராசு திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து சின்னராசு கொடுத்த புகாரின்படி வழக்கு பதிந்த மப்பேடு போலீசார் நடத்திய விசாரணையில் லாரி ஓட்டுனர் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த அப்துல்ரகுமான், 34 என தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி