உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குப்பை கழிவுடன் நிறம் மாறிய மகன்காளிகாபுரம் குளம்

குப்பை கழிவுடன் நிறம் மாறிய மகன்காளிகாபுரம் குளம்

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், மகன்காளிகாபுரம் கிராமம், ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்ட நீர்ப்பிடிப்பு பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.ஏராளமான ஓடைகளுக்கு இடையே அமைந்துள்ள இந்த பகுதியில், அம்மலேரி என்ற பெரிய ஏரியும் உள்ளது.நீர்வளம் மிக்க மகன்காளிகாபுரத்தில், மகன்காளியம்மன் கோவில் எதிரே பொதுக்குளம் உள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக, இந்த குளம் துார்வாரி சீரமைக்கப்பட்டது. இதில், சீரான படித்துறையும், அதை சுற்றிலும் துருப்பிடிக்காத இரும்பால் தடுப்பு வேலியும் அமைக்கப்பட்டது. ஆண்டு முழுதும் குளத்தில் தண்ணீர் நிரம்பியே இருக்கும். இதில், கிராமத்தினர் நீராடி வருகின்றனர்.இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த குளம் துார்வாரி சீரமைக்கப்படாததால், குளத்தின் தண்ணீர் பயன்படுத்த தகுதியில்லாத நிலையில் அசுத்தமாக காணப்படுகிறது. மேலும், குளத்தில் குப்பை மிதக்கிறது. படித்துறையில் செடிகள் முளைக்க துவங்கியுள்ளன. இதனால், குளம் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ