| ADDED : ஜூன் 21, 2024 11:23 PM
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், நொச்சிலி ஊராட்சிக்கு உட்பட்டது கொத்துார் காலனி. இங்கு, 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு, மேல்நிலை குடிநீர் தொட்டி வாயிலாக குடிநீர் வினியோகம்செய்யப்பட்டு வருகிறது. மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு குடிநீர் ஏற்றும் குழாய், சில இடங்களில் உடைந்து கிடந்தது. கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் மழையில், இந்த குழாய் உடைப்பு பகுதியில் மழைநீர் கலந்துள்ளது. இந்த குடிநீரை பயன்படுத்தியதால், கொத்துார் அருந்ததி காலனியை சேர்ந்த, 14 பேருக்கு வயிற்று போக்கு மற்றும் வாந்தி பாதிப்புஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பள்ளிப்பட்டு வட்டார மருத்துவர் தனஞ்செழியன் தலைமையிலான மருத்துவ குழுவினர் நேற்று இந்த கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து பகுதி வாசிகளுக்கு சிகிச்சைமேற்கொண்டனர். ஊரக வளர்ச்சி துறையினர் குழாய் உடைப்புகளை சரி செய்தனர். மருத்துவ குழுவினர், குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்தனர். குடிநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு கிடைத்தபின் அதற்கு ஏற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனசுகாதார துறையினர்தெரிவித்துள்ளனர்.