மேலும் செய்திகள்
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
4 hour(s) ago
பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி
4 hour(s) ago
மதுபோதையில் அலப்பறை போக்குவரத்து பாதிப்பு
4 hour(s) ago
பொன்னேரி,:மீஞ்சூர் பஜார் பகுதியில், 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மீஞ்சூரை சுற்றியுள்ள கிராமங்களின் வியாபார மையமாக, மீஞ்சூர் பஜார் பகுதி அமைந்துள்ளது. இங்கு வருவோர் இயற்கை உபாதைகளை கழிக்க வழியின்றி கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, சுகாதார வளாகம் அமைத்து தரவேண்டும் என, பொன்னேரி எம்.எல்.ஏ., துரைசந்திரசேகர் மற்றும் மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.சுகாதார வளாகம் அமைப்பதற்கு மீஞ்சூர் பகுதியில் இடம் ஒதுக்கி தரவேண்டும் என, நேற்று பொன்னேரி எம்.எல்.ஏ., துரைசந்திரசேகர், பொன்னேரி சப் - கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்திடம் கோரிக்கை மனு அளித்தார்.அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பஜார் பகுதியில், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான, பொது கழிப்பறை கட்ட வேண்டிய அவசியம் குறித்து, பல மனுக்கள் அளிக்கப்பட்டு வருகிறது. அதற்கான இடவசதி இல்லாததால், பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது.மீஞ்சூர் பகுதியில் வருவாய்த் துறைக்கு சொந்தமான, 3 சென்ட் இடம் இருப்பதை அறிந்து, அங்கு அமைக்கலாம் என்ற ஆலோசனை உள்ளது.தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் மீஞ்சூர் பகுதியில், குறிப்பாக பெண்கள் பயன்பெறும் வகையில், இந்த இடத்தை தேர்வு செய்து தரவேண்டும்.இவ்வாறு அதில் உள்ளது.இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக, சப் - கலெக்டர் தெரிவித்தார்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago