மேலும் செய்திகள்
பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
11 hour(s) ago
இன்று இனிதாக திருவள்ளூர்
11 hour(s) ago
அரசு பஸ்சில் ஸ்டிக்கர் ஒட்டிய நா.த.க.,வினர் கைது
11 hour(s) ago
டேபிள் டென்னிஸ் எஸ்.ஆர்.எம்., பல்கலை சாம்பியன்
11 hour(s) ago
கும்மிடிப்பூண்டி, : கும்மிடிப்பூண்டி, ரெட்டம்பேடு சாலையில் இருந்து சின்னசோழியம்பாக்கம், பெரியசோழியம்பக்கம் வழியாக ஏனாதிமேல்பாக்கம் வரை செல்லும் சாலை, மாநில நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ளது.அந்த சாலையில், சின்னசோழியம்பாக்கம் கிராமத்தில் சாலையின் குறுக்கே உள்ள நீரோடையின் மீது பாலம் அமைக்க பணிகளுக்காக, 1.90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, ஆறு மாதங்களுக்கு முன் பணிகள் துவங்கப்பட்டன.விறுவிறு என மேற்கொண்ட பணிகளால், பால பணிகள் முடிக்கப்பட்டன. பாலத்துடன் சாலையை இணைக்கும் பணிகளுக்காக ஜல்லி கற்கள் நிரப்பப்பட்டன. அதன் பின் எந்த பணிகளும் மேற்கொள்ளாததால், மூன்று மாத காலமாக பாலத்துடன் சாலை இணைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.அப்பகுதியில் பரவி கிடக்கும் ஜல்லி கற்கள் மீது வாகனங்கள் செலுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பலர் அப்பகுதியில் தடுமாறி விழுந்து காயம் அடைவது தொடர் கதையாக உள்ளது. கிடப்பில் போடப்பட்ட பணிகளை விரைந்து முடித்து பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய மாநில நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago