உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் நாவல் பழம் சீசன் துவக்கம்

ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் நாவல் பழம் சீசன் துவக்கம்

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், பாலாபுரம் ஊராட்சியில் ஆர்.ஜே.கண்டிகை அருகே உள்ள மலைப்பகுதியில் பழத்தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் பராமரிக்கப்படும் இந்த பழத்தோட்டத்தில் முந்திரி, நாவல், பலா, சீதாபழம், நெல்லி, அத்தி, கொய்யா, தர்பூசணி, வாழை என, பல்வேறு விதமான பழ மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன.இதில், நடப்பு பருவத்தில் முந்திரி மற்றும் மாம்பழம் சீசன் நிறைவடையும் நிலையில், வரும் ஆடி மாதம் நாவல் சீசன் துவங்க உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள நாவல் மரங்களில், தற்போது பூக்களும், பிஞ்சுகளும் காணப்படுகின்றன. ஓரிரு வாரங்களில் நாவல் சீசன் துவங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், இந்த பழத்தோட்டத்திற்கு நேற்று புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. இதில், போதுமான அளவிற்கு தண்ணீர் கிடைக்கிறது என, கிராமத்தினர் தெரிவித்துள்ளனர்.இதன் வாயிலாக பழத்தோட்டத்திற்கு தடையின்றி பாசன வசதி மேற்கொள்ள முடியும். ஏற்கனவே இந்த தோட்டம் முழுதும் குழாய் பதிக்கப்பட்டு, 100 நாள் வேலை தொழிலாளர்கள் தினமும் பாசனம் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை