உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வலுவிழந்து வரும் மின் கம்பங்கள் மாற்றியமைக்க அதிகாரிகள் பேரம்?

வலுவிழந்து வரும் மின் கம்பங்கள் மாற்றியமைக்க அதிகாரிகள் பேரம்?

புழல்:புழல் அடுத்த சூரப்பட்டு, சீனிவாசா நகர், ரங்கா அவென்யூ மூன்றாவது தெரு சந்திப்பில் உள்ள மின் கம்பம் சேதமடைந்துள்ளது. மின் கம்பிகளும் வீட்டின் மேல் உரசும் நிலையில் தாழ்வாக தொங்குகின்றன. சேதமடைந்த மின் கம்பத்திற்கு தாங்கி பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட கம்பங்களும் சேதமடைந்துள்ளன. மாதந்தோறும் நடக்கும் மின் பராமரிப்பு பணியின் போது கூட, மேற்கண்ட பிரச்னைகள் சீரமைக்கப்படுவதில்லை. இதனால், மின் விபத்து ஏற்படும் அச்சத்தில் பகுதி வாசிகள் உள்ளனர்.இதுகுறித்து, புழல் மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்தால், 20,000 ரூபாய் வரை செலவாகும் என, பேரம் பேசுவதாக பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதன் காரணமாக, அப்பகுதி வாசிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.l ஆவடி மாநகராட்சி 40வது வார்டு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 4வது பிளாக்கில், 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மின் கம்பம் பல மாதங்களாக சிதிலமடைந்த நிலையில், ஆபத்தான வகையில் உள்ளது. சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை