உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குட்கா கடத்திய முதியவர் கைது

குட்கா கடத்திய முதியவர் கைது

திருத்தணி:ஆந்திராவில் இருந்து திருத்தணி பகுதிகளுக்கு, குட்கா பொருட்கள் கடத்தி வந்து விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட எஸ்.பி., ஸ்ரீனிவாசா பெருமாள் உத்தரவின்படி, திருத்தணி போலீசார் தமிழக - ஆந்திர மாநில எல்லையான திருத்தணி பொன்பாடி சோதனைச்சாவடியில், வாகன தணிக்கை நடத்தினர். அப்போது, நகரி பகுதியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை போலீசார் நிறுத்தி, சோதனை செய்ததில், 7 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.விசாரணையில், திருத்தணி பெரியார் நகரைச் சேர்ந்த ராமமூர்த்தி, 65, என, தெரிய வந்தது. தொடர்ந்து, குட்காவை பறிமுதல் செய்த போலீசார், ராமமூர்த்தியை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி