உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நாக் சான்றிதழ் பெற வாய்ப்பு

நாக் சான்றிதழ் பெற வாய்ப்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:அம்பத்துார், அரசினர் தொடர் அறிவுரை மையம், தற்போது மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் என்ற பெயரில், திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலகக் கட்டடத்தில், 2019 அக்., 1ம் தேதி முதல் இயங்கி வருகிறது. தொழிற்பழகுனர் பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு மத்திய அரசு வழங்கும், 'நாக்' எனப்படும் தேசிய தொழிற்பழகுனர் சான்றிதழ், 1971 - 2018 வரையிலான சான்றிதழ் இவ்வலுவலகத்தில் உள்ளது.இவ்வலுவலகத்தின் வாயிலாக தொழிற்பழகுனர் பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் உரிய ஆதாரங்களுடன் அணுகி சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்