| ADDED : ஜூலை 30, 2024 06:54 AM
ஸ்ரீபெரும்புதுார்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து சென்னையை நோக்கி, 40 டன் இரும்பு ரோல்கள் ஏற்றி, நேற்று காலை லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரியை பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார், 24, என்பவர் ஓட்டி வந்தார்.சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் ராஜிவ் காந்தி நினைவகம் அருகே வந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலை நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.பீக் ஹவர் எனும் போக்குவரத்து மிகுந்த நேரம் என்பதால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சென்னை மார்க்கமாக வந்த வாகன ஓட்டிகள், நெரிசலில் சிக்கி அவதி அடைந்தனர். ஸ்ரீபெரும்புதுார் போக்குவரத்து போலீசார், கிரேன் வாயிலாக லாரியை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர்செய்தனர்.