| ADDED : ஜூலை 03, 2024 12:55 AM
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ரகாகவநாயுடுகுப்பம் கிராமம், அம்மையார்குப்பத்தில் இருந்து மட்டவலம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது ராகவநாயுடுகுப்பம் அரசு நடுநிலைப்பள்ளி அருகே, ராகவநாயுடுகுப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பழைய கட்டடம் அமைந்துள்ளது. இந்த கட்டடம் அமைந்துள்ள பகுதியை கடந்து மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், இந்த கட்டடம் பழுதடைந்துள்ளதால், இரண்டு ஆண்டுகளாக கைவிடப்பட்டு, வேறு கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. கைவிடப்பட்ட இந்த கட்டடத்தின் மேல்தளம் தற்போது மேலும் உருக்குலைந்து கான்கிரீட் உதிர்ந்து வருகிறது.எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலை உள்ளது. உருக்குலைந்து வரும் கட்டடத்தால், விபரீதம் ஏற்படும் முன் இடித்து அகற்ற வேண்டும் என பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.