உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அங்கன்வாடி மையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு

அங்கன்வாடி மையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு

பொன்னேரி:பொன்னேரி அடுத்த திருவேங்கிடபுரம் பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. நேற்று காலை அங்கன்வாடி ஊழியர், குழந்தைகளுக்கு உணவு பொருட்களை வழங்குவதற்காக கதவை திறந்தார்.அப்போது, 6 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு ஒன்று, அங்கிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக, பொன்னேரி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர்.இதையடுத்து, பாம்புகளை பிடிக்கும் இடுக்கியை கொண்டு, அங்கன்வாடி மையத்தில் புகுந்த சாரை பாம்பை லாவகமாக பிடித்தனர்.அதை சாக்கு பையில் போட்டு, காட்டு பகுதியில் விடுவதற்கு பாதுகாப்பாக கொண்டு சென்றனர். தற்போது, அங்கன்வாடி மையத்திற்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதால், குழந்தைகள் யாரும் அங்கு இல்லை.அங்கன்வாடி மையத்தில் பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பையும், பெற்றோரிடம் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே, அங்கன்வாடி மைய வளாகத்தை துாய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை