உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பீதி

ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பீதி

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேரூராட்சி, தமிழக -- ஆந்திர எல்லையில் உள்ளது. சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம், நாகலாபுரம், பிச்சாட்டூர், நகரி, புத்துார், ரேணிகுண்டா, திருப்பதி, கடப்பா, கர்நுால், நந்தியால், ஐதராபாத் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் ஊத்துக்கோட்டை வழியாக செல்கின்றன.இதனால், ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் இருக்கும். ஊத்துக்கோட்டை பகுதியில் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் கால்நடை வளர்த்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் தங்களது கால்நடைகளை வீட்டில் கட்டி வளர்க்காமல், சாலையில் திரிய விடுகின்றனர். இவைகள் கூட்டமாக இரை தேடி கடைகளுக்கு செல்லும்போது வியாபாரிகள் அதை விரட்டும் போது, அவை தறிகெட்டு ஓடும் போது பாதசாரிகள், வாகன ஒட்டிகள் மீது மோதி விடுகிறது. இதனால் ஏற்படும் விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன் பேரூராட்சி நிர்வாகம் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை