உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வங்கனுாருக்கு கூடுதல் பேருந்து இயக்க பயணியர் கோரிக்கை

வங்கனுாருக்கு கூடுதல் பேருந்து இயக்க பயணியர் கோரிக்கை

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வங்கனுாரில், 15 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். கடந்த 1980களில், வங்கனுாருக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டு வந்தன. வங்கனுார், டி.சி.கண்டிகை, சிங்கசமுத்திரம் பேருந்துகள் வாயிலாக, பகுதிவாசிகள் ஆர்.கே.பேட்டை, சோளிங்கர், திருத்தணி உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணித்தனர். அதன் பின், தனியார் பேருந்துகளின் சேவை இந்த மார்க்கத்தில் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால், 2 கி.மீ., துாரம் நடந்து கிருஷ்ணாகுப்பம் கூட்டு சாலையில் இருந்து பேருந்து பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.இரவு நேரத்தில், இந்த வழியாக நடந்து செல்ல பெண்கள். முதியவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். 40 ஆண்டுகளில் மக்கள் தொகை பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையில், ஒரு பேருந்து மட்டுமே வங்கனுாருக்கு இயக்கப்பட்டு வருவதால், பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர். வங்கனாருக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். அதற்கு ஏற்ப பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் பகுதியிலிருந்து மணவாள நகர், மேல்நல்லாத்துார், நுங்கம்பாக்கம், எறையாமங்கலம், மப்பேடு, கீழச்சேரி வழியாக சுங்குவார்சத்திரம் வரை தடம் எண் : டி 84 என்ற அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.இதை நம்பி 150க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் எறையாமங்லகம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளிக்கும், கீழச்சேரியில் உள்ள கல்லுாரிக்கும் சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பேருந்து கடந்த சில தினங்களாக பள்ளி நேரங்களில் சரியான முறையில் இயக்கப்படுவதில்லை. இதனால், பள்ளி மற்றும் கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் மாணவ - மாணவியர் பயன்பெறும் வகையில், அரசு பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ