உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பராமரிப்பில்லாத குடிநீர் தொட்டி சாலையை கடந்த புள்ளிமான் வாகனம் மோதி உயிரிழப்பு

பராமரிப்பில்லாத குடிநீர் தொட்டி சாலையை கடந்த புள்ளிமான் வாகனம் மோதி உயிரிழப்பு

கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட 43 ஊராட்சிகளிலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தன. கடம்பத்துார் ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்ட 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டியை கடம்பத்துார் பகுதிவாசிகள் மற்றும் ஒன்றிய அலுவலக பணியாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த குடிநீர் தொட்டி கடந்த 2012-13ம் ஆண்டு ஊரக கட்டடங்கள் பராமரிப்பு திட்டத்தின் கீழ் 55,000 ரூபாய் மதிப்பில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் கடந்த 10 ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாததால் தொட்டி பழுதடைந்து வருவதோடு வினியோகிக்கப்படும் குடிநீரும் துர்நாற்றம் வீசுவதாக பகுதிவாசிகள் மற்றும் ஒன்றிய அலுவலக பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் தொட்டி பராமரிப்பு இல்லாமல் உள்ளது பகுதிவாசிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டியை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டுமென பகுதிவாசிகள் மற்றும் ஒன்றிய அலுவலக பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை