உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அழுகிய நிலையில் தொழிலாளி உடல் மீட்பு

அழுகிய நிலையில் தொழிலாளி உடல் மீட்பு

கடம்பத்துார்:திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்தவர் பால்ராஜ், 48. இவரது சகோதரர் சிம்சன், 46; பால்ராஜின் வீட்டில் தங்கி, மணவாள நகர், ஒண்டிக்குப்பம் பகுதியில் சதீஷ்குமார் என்பவரது பெயின்ட்கடையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடையின் உரிமையாளர் நான்கு நாட்களுக்கு முன் உறவினர் திருமணத்திற்கு வெளியூர் சென்று விட்டார். கடையை சிம்சன் கவனித்து வந்துள்ளார்.நேற்று முன்தினம் மாலை அப்பகுதிக்கு வந்த சதீஷ்குமாரின் நண்பர் ஜீவன் என்பவர், கடை திறக்கப்படாததைக் கண்டு, அருகில் உள்ள தங்கும் அறையை திறந்து பார்த்தபோது சிம்சன் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பால்ராஜ் கொடுத்த புகாரின்படி வழக்கு பதிந்த மணவாள நகர் போலீசார், உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை