உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வெள்ளியூர் நீரேற்று நிலையம் ரூ.44 லட்சத்தில் சீரமைப்பு

வெள்ளியூர் நீரேற்று நிலையம் ரூ.44 லட்சத்தில் சீரமைப்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில், 450க்கும் மேற்பட்ட தெருக்களில், 16,985 வீடுகளில், 65,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு தினமும் குடிநீர் வழங்க பட்டரைபெரும்புதுார், புங்கத்துார் உட்பட 13 இடத்தில் ஆழ்துளை குழாய் கிணறு அமைத்து, 15 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.மேலும், 2004 முதல் வெள்ளியூர் கொசஸ்தைலை ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, தினமும் 35 லட்சம் லிட்டர் அளவிற்கு குடிநீர் எடுக்கப்பட்டு, திருவள்ளூர் நகராட்சிக்கு வினியோகிக்கப்பட்டு வந்தது. இவ்வாறு பெறப்படும் குடிநீர், நகரின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட 13 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு தெரு குழாய், வீட்டு இணைப்பு வாயிலாக, தினமும் 50 லட்சம் லிட்டர் அளவிற்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், வெள்ளியூரில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்தில், புதிய மோட்டார் பம்ப் 20 லட்சத்திலும், தானியங்கி மின்மாற்றி மற்றும் கேபிள் உள்ளிட்டவைக்கு 9 லட்சத்தில் சீரமைக்கப்பட்டுள்ளது.கொசஸ்தலை ஆற்றில் கூடுதலாக நான்கு ஆழ்துளை கிணறு மற்றும் குழாய் அமைக்க 15 லட்சம் என, மொத்தம் 44 லட்சம் ரூபாய் நகராட்சி பொது நிதியில் இருந்து சீரமைக்கப்பட்டுள்ளதாக, நகராட்சி தலைவர் உதயமலர் பாண்டியன், கமிஷனர் திருநாவுக்கரசு ஆகியோர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி