உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மேம்பாலம் ஓரம் மணல் குவியல் முறையாக பராமரிக்க கோரிக்கை

மேம்பாலம் ஓரம் மணல் குவியல் முறையாக பராமரிக்க கோரிக்கை

கும்மிடிப்பூண்டி:சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கவரைப்பேட்டை அடுத்த புதுவாயல் பகுதியில் மேம்பாலம் உள்ளது. அந்த மேம்பாலத்தில் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால், சாலையோரம் மணல் குவியல் மண்டி கிடக்கிறது.இதனால், சாலையோரம் செல்ல வேண்டிய இருசக்கர வாகனங்கள், மணல் குவியலுக்கு அஞ்சி, மேம்பாலத்தின் நடுவே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், வேகமாக செல்லும் கனரக வாகனங்களுக்கு இடையே, இருசக்கர வாகனங்கள் செல்ல நேரிடுவதால், விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.எனவே, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை