உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ‛டி-35 அரசு பேருந்தை முறையாக இயக்க கோரிக்கை

‛டி-35 அரசு பேருந்தை முறையாக இயக்க கோரிக்கை

கும்மிடிப்பூண்டி: பொன்னேரி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து தடம் எண்: 'டி35' அரசு டவுன் பேருந்து இயக்கப்படுகிறது. பொன்னேரியில் இருந்து கும்மிடிப்பூண்டி, ஏடூர் வழியாக பல்லவாடா வரை நான்கு முறை, பொன்னேரியில் இருந்து கும்மிடிப்பூண்டி வழியாக சுண்ணாம்புகுளம் வரை இரண்டு முறை என தினசரி இயக்கப்பட்டது.கடந்த ஆறு மாத காலமாக அந்த பேருந்து சேவை முறையாக இயக்கப்படவில்லை. புகார் அளித்தால், ஓட்டுனர், நடத்துனர் பற்றாக்குறை என பொன்னேரி பேருந்து பணிமனை சார்பில் தெரிவிப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர். மேற்கண்ட கிராம மக்களின் நலன் கருதி, டி-35 பேருந்தை முறையாக இயக்க வேண்டும் என மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ