உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பேரிட்டிவாக்கம் நுாலக கட்டடம் சீரமைக்க கோரிக்கை

பேரிட்டிவாக்கம் நுாலக கட்டடம் சீரமைக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை: பேரிட்டிவாக்கம் ஊராட்சியில், பேரிட்டிவாக்கம் கிராமம், காலனி, வடதில்லை, உப்பரபாளையம், ஏரிக்கரை ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு 6 வார்டுகளில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 2006ம் ஆண்டு இந்த ஊராட்சியில் நுாலக கட்டடம் கட்டி திறப்பு விழா நடந்தது. கட்டடம் சிதிலமடைந்த நிலையில் கடந்த, 2013- - 14ம் ஆண்டு 29,000 ரூபாயில் சீரமைப்பு பணி நடந்தது. தற்போது இந்த கட்டடம் மிகவும் சிதிலமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதில் உள்ள புத்தகங்கள் வீணாகின.சுதந்திர தினத்தை ஒட்டி நடந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட கலெக்டர் பிரபு சங்கரிடம் கிராம மக்கள் நுாலக கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். எனவே, மழைக்காலம் துவங்கும் முன் நுாலக கட்டடத்தை சீரமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை