உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கோடையில் சீரான குடிநீர் கிடைக்க சிறு மின்விசை குழாய் சீரமைக்க கோரிக்கை

கோடையில் சீரான குடிநீர் கிடைக்க சிறு மின்விசை குழாய் சீரமைக்க கோரிக்கை

திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியத்தில் 42 ஊராட்சிகளில் 100க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் 500க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இப்பகுதிவாசிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தேவையான தெருக்களில் சிறுமின் விசை குழாய் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒன்றியத்தில் 300க்கும் மேற்பட்ட தெருக்களில் சிறுமின் விசை குழாய் அமைக்கப்பட்டது. தற்போது அதில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட சிறுமின் விசை குழாய் பழுதடைந்து குடிநீர் டேங்கில் நீர் நிரப்புவதற்காக அமைக்கப்பட்ட நீர் மூழ்கி மின்மோட்டார் பழுதடைந்தது. இதை சீரமைக்க அந்தந்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால், பல லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீருக்காக அமைக்கப்பட்ட சிறுமின் விசை குழாயை பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் பழுதடைந்து பயன்பாடின்றி உள்ள சிறுமின் விசை குழாயை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்