உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆரம்ப சுகாதார நிலையம் மணவூரில் அமைக்க கோரிக்கை

ஆரம்ப சுகாதார நிலையம் மணவூரில் அமைக்க கோரிக்கை

திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட மணவூர் ஊராட்சியில், 10,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சுற்றி மருதவல்லிபுரம், பாகசாலை, எல்.வி.புரம், குப்பம்கண்டிகை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இங்கு மருத்துவமனை வசதி இல்லாததால், இப்பகுதிவாசிகள் அவசர சிகிச்சைக்கு, 10 -- 13 கி.மீ., பயணியத்து, திருவாலங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. இரவு நேரங்களில் போக்குவரத்து வசதி இல்லாததால், கர்ப்பிணியர் மற்றும் விபத்தில் சிக்குவோரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது மிகுந்த சிரமமாக உள்ளது.இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:இரவில் கர்ப்பிணியருக்கு பிரசவ வலி மற்றும் சிறு விபத்தில் காயமடைந்தோர் திருவாலங்காடு அல்லது திருவள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது.மேலும், கர்ப்பிணியருக்கு வாரம் ஒருமுறை திருவாலங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆலோசனை மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இதற்காக, 10 கி.மீ., துாரம் செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதுடன், இரண்டு மணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெறும் சூழல் உள்ளது.எனவே, 20 கிராமங்களுக்கு மைய பகுதியாக உள்ள மணவூரில், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க, மாவட்ட சுகாதார துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ