உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இடையூறு டாஸ்மாக் அகற்ற கோரிக்கை

இடையூறு டாஸ்மாக் அகற்ற கோரிக்கை

பொன்னேரி: பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே, டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இங்கு மதுபானங்களை வாங்கிக்கொண்டு, குடியிருப்புகள் உள்ள தெருக்களில் அமர்ந்து குடிக்கின்றனர். இதனால் வீடுகளில் உள்ள பெண்கள் வெளியில் வருவதற்கே தயக்கம் காட்டுகின்றனர்.மாலை முதல், இரவு கடை மூடும் வரை, மதுபானங்களை வாங்க வருபவர்கள், இருசக்கர வாகனங்களை சாலையில் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்திவிட்டு செல்வதால், மற்ற வாகனங்கள் சிரமத்துடன் செல்கின்றன.இதேபோன்று, பொன்னேரி புதிய தேரடி தெரு டாஸ்மாக் கடையில் மதுபானங்கள் வாங்குபவர்கள், அங்குள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று, பயணியர் இருக்கைகளில் அமர்ந்து குடிக்கின்றனர்.பின், மதுபாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்துவிட்டு செல்கின்றனர். மேற்கண்ட இரண்டு இடங்களிலும் செயல்படும் 'டாஸ்மாக்' கடையால் பொதுமக்கள், குடியிருப்புவாசிகள், வாகன ஓட்டிகள், பேருந்து பயணியர் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.இடையூறாக உள்ள மேற்கண்ட கடைகளை அகற்ற வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை