உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / காவு வாங்க காத்திருக்கும் தொட்டி கவரைப்பேட்டை வாசிகள் அச்சம்

காவு வாங்க காத்திருக்கும் தொட்டி கவரைப்பேட்டை வாசிகள் அச்சம்

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை, தெலுங்கு முஸ்லிம் காலனி சாலையோரம், முக்கிய குடியிருப்பு பகுதியான தீனதயாளன் நகர் உள்ளது. இங்கு, 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்தும் வருகின்றனர்.இப்பகுதியின் மத்தியில், 60,000 லிட்டர் கொள்ளளவு உடைய மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியை தாங்கி நிற்கும் துாண்கள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதால், இப்பகுதி வாசிகள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.அனைத்து துாண்களும் விரிசல் அடைந்து, உள்ளிருக்கும் கம்பிகள் தெரியும் அளவுக்கு சிமென்ட் காரைகள் பெயர்ந்துள்ளன. மேலும், தொட்டியின் மேல் பரப்பில், பல இடங்களில் உள்ளிருக்கும் கம்பிகள் தெரிகின்றன.எனவே, உயிர்ப்பலி ஏற்படும் முன், சேதமடைந்த நீர்தேக்க தொட்டியை இடித்து விட்டு, புதிதாக தொட்டி அமைக்க, கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகத்தினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ