உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிறுவாபுரி முருகன் கோவிலில் தரிசன நேரத்தில் கட்டுப்பாடு

சிறுவாபுரி முருகன் கோவிலில் தரிசன நேரத்தில் கட்டுப்பாடு

கும்மிடிப்பூண்டி:திருவள்ளூர் மாவட்டம், ஆரணி அடுத்த சின்னம்பேடு கிராமத்தில், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலில், செவ்வாய்க்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர்.இதனால், இரவு 8:30 மணிக்கு நடை அடைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. கட்டுக்கு அடங்காத பக்தர்கள் கூட்டத்தால், சுவாமி தரிசனம் முடிந்து நடை அடைக்க, இரவு 11:30 மணி வரை ஆகிறது.போலீஸ் பாதுகாப்பு அளிப்பதில் சிரமம் ஏற்படுவதுடன், சின்னம்பேடு கிராமத்தில், இரவு நேரத்தில் மர்மநபர்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது என, கிராம மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.இதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை முதல், இனிவரும் செவ்வாய்க்கிழமைகளில் வழக்கம் போல் அதிகாலை 4:15 மணிக்கு நடை திறக்கப்படும். இரவு 8:30 மணிக்கு பக்தர்கள் செல்லும் அனைத்து தரிசன நுழைவாயில்களும் அடைக்கப்படும்.அப்போது, வரிசையில் நிற்பவர்கள் தரிசனம் செய்து முடித்ததும் நடை அடைக்கப்படும் என, கோவில் செயல் அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை