உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வேன் மோதி துாய்மை பணியாளர் பலி பழவேற்காடில் சாலை மறியல்

வேன் மோதி துாய்மை பணியாளர் பலி பழவேற்காடில் சாலை மறியல்

பழவேற்காடு: பழவேற்காடு, எடமணி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் சம்பத், 50. பழவேற்காடு ஊராட்சியில் துாய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார்.நேற்று காலை, 5:00 மணிக்கு பணிக்கு செல்வதற்காக, அங்குள்ள பழவேற்காடு சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.புதியதாக அமைந்து வரும் பழவேற்காடு - பசியாவரம் பாலம் அருகே செல்லும்போது, எதிரில் வந்த மகேந்திரா வேன் சம்பத் மீது மோதியது.இதில் பலத்த காயம் அடைந்த சம்பத், சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்த கிராமவாசிகள், அங்கு விரைந்தனர். விபத்து ஏற்படுத்திய டிரைவரை கைது செய்ய வேண்டும் எனக்கூறி, பொன்னேரி - பழவேற்காடு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அந்த சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. திருப்பாலைவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர்.விபத்து ஏற்படுத்திய டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். அதையடுத்து கிராமவாசிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சம்பத்தின் உடலை போலீசார் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை