உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ குட்கா பறிமுதல்

ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ குட்கா பறிமுதல்

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் போலீசாருக்கு கிடைத்த தகவல்படி நேற்று முன்தினம் உதவி ஆய்வாளர் கண்ணன் மற்றும் போலீசார் நயப்பாக்கம் காலனி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த கருணாகரன், 35 என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஸ்வாகத், ஹான்ஸ், கூல் லிப் போற்று 2 கிலோ குட்கா போதைப்பாக்குகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 15,000 ரூபாய் இருக்குமென மணவாளநகர் போலீசார் தெரிவித்தனர். போலீசார் கருணாகரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை