உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மணல் திருட்டு 3 பேர் கைது

மணல் திருட்டு 3 பேர் கைது

வெள்ளவேடு:வெள்ளவேடு அடுத்த குத்தம்பாக்கம் அருகே உள்ள இருளர்பாளையம் பகுதியில், அரசு நிலத்தில் மணல் திருட்டு நடப்பதாக வெள்ளவேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, வெள்ளவேடு போலீசார் நேற்று முன்தினம் காலை அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள அரசு நிலத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிக் கொண்டிருந்த பொக்லைன் இயந்திரம் மற்றும் இரண்டு அசோக் லேலன்ட் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அப்பகுதியைச் சேர்ந்த பொக்லைன் உரிமையாளரான ராஜ்குமார், 40, மற்றும் லாரி டிரைவர்களான ராஜசேகர் மகன் அஜீத், 31, கோதண்டன் மகன் அஜீத், 24, ஆகிய மூவரையும் கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ