உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்

திருத்தணி;ஆந்திர மாநிலம் நகரி பகுதியில் இருந்து திருத்தணி பகுதிக்கு மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி., உத்தரவின்படி திருத்தணி சிறப்பு எஸ்.ஐ., சேகர் தலைமையிலான போலீசார் நேற்று மாலை திருத்தணி பைபாஸ் சாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நகரி பகுதியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, மேல்பகுதியில் ஜல்லிகற்களும், அதன் அடியில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய லாரி ஓட்டுனர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ