உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தானியங்கி ஷட்டர் பணி ஒப்பந்ததாரர் தேர்வு

தானியங்கி ஷட்டர் பணி ஒப்பந்ததாரர் தேர்வு

சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகள் வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தியாகிறது. வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏரிகள் நிரம்பும் போது, அவற்றில் இருந்து மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.இதற்காக, மதகுகளை ஹைட்ராலிக் முறையில், ஊழியர்கள் திறக்கின்றனர். இதை, தானியங்கி முறையில் அமைப்பதற்கு, அரசிடம் 32 கோடி ரூபாய் கேட்கப்பட்டு இருந்தது. ஆனால், 19.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிதியில், சிறப்பு 'சாப்ட்வேர்' உருவாக்கப்படவுள்ளது. அதன்பின், தானியங்கி முறையில் இயங்கும் புதிய ஷட்டர்கள் அமைக்கப்பட உள்ளது. இப்பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் தேர்வு, வரும் 29ம் தேதி நடக்கவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ