| ADDED : மே 12, 2024 12:00 AM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடு்த பாதிரிவேடு போலீஸ் நிலையம் அருகே உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் பின்புறம் இரு தினங்களுக்கு முன் நிர்வாண நிலையில், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து கிடந்தார். வழக்கு பதிந்த பாதிரிவேடு போலீசார், கொலை என்பதை உறுதி செய்தனர். கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது தெரியாத நிலையில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணையை துவக்கினர். அந்த பதிவுகளில் காணப்பட்ட மூன்று வாலிபர்களை அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணைக்கு பின் அவர்கள் கொலை செய்ததை ஒப்புகொண்டனர். அவர்கள், பாதிரிவேடு சூர்யா, 25, தேர்வாய்கண்டிகை சுவேந்தர், 22, கண்ணாம்பாக்கம் ஜெபகுமார், 21, என்பது தெரிந்தது.போலீசாரின் தொடர் விசாரணையில், அந்த பெண் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி சம்பவம் நடந்த இடத்தில் மது குடித்துள்ளார். அப்போது ஏற்கனவே குடி போதையில் இருந்த மேற்கண்ட மூவரும் அந்த பெண்ணை கண்டுள்ளனர். சூர்யா அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்து ஆசைக்கு இணங்க அழைத்துள்ளார். இருவரும் பெட்ரோல் பங்க் பின்புறம் உல்லாசமாக இருந்துள்ளனர். பின் தன் நண்பர்களுக்கு இணங்க கேட்டபோது அந்த பெண் மறுத்துள்ளார். அங்கிருந்த கல்லால் அந்த பெண்ணை தாக்கி மூவரும் கூட்டு பலாத்காரம் செய்ய முயன்றபோது, அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். அப்போது அந்த பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக மூவரும் தெரிவித்துள்ளனர்.போலீசார் மூவரையும் நேற்று கைது செய்தனர். கொலையான பெண் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.