உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குப்பை எரிப்பால் புகை மூட்டம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

குப்பை எரிப்பால் புகை மூட்டம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

கடம்பத்துார்: திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட புதுமாவிலங்கை ஊராட்சி.இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியியில் சாலையோரம் சேகரமாகும் குப்பையை, 100 நாள் திட்ட தொழிலாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் எரித்து வருகின்றனர்.ஊராட்சி பகுதியில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் இருந்தும், இவ்வாறு, சாலையோரம் குப்பையை எரித்து வருவது பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத் திணறல் மற்றும் கண் எரிச்சல் போன்ற அவதிப்பட்டு வருகின்றனர்.இதேபோல் கடம்பத்துார் அடுத்த பூண்டி ஒன்றியத்துக்குட்பட்ட திருப்பாச்சூர் பகுதியில் நெடுஞ்சாலையோரம் குப்பை எரிக்கப்பட்டு வருகிறது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெடுஞ்சாலையோரம் குப்பை எரிப்பதை தடுக்க நடவடிக்கை வேண்டும் என, பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ