மேலும் செய்திகள்
பட்டாக்கத்தியால் கேக் வெட்டி இன்ஸ்டாவில் பதிவு: 3 பேர் கைது
19 hour(s) ago
திருத்தணி அரசு பள்ளியில் பனை விதைகள் நடவு
20 hour(s) ago
பொன்னேரி:பழவேற்காடு சரணாலய பகுதியில் பூநாரை, வர்ணநாரை, கூழைக்கடா, கடல்பொந்தா, ஊசிவால் வாத்து, உல்லான் என பல வகையான பறவை இனங்கள் உள்ளன.பழவேற்காடு ஏரியானது, வங்காள விரிகுடா கடலை ஒட்டி அமைந்துள்ளதால், அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டு, உள்நாட்டு பறவைகள் இங்கு வருவது வழக்கம்.நவம்பர் முதல், மார்ச் மாதம் வரை, பல்வேறு வகையான வெளிநாட்டுப் பறவைகள் இனப் பெருக்கத்திற்காக இங்கு வந்து செல்கின்றன. இந்த ஆண்டும் ஏராளமான பறவைகள் பழவேற்காடு ஏரியில் குவிந்து வருகின்றன. இந்த ஆண்டு கணக்கெடுப்பின்படி, 151வகையான பறவைகள் வந்து உள்ளன. வழக்கமாக பழவேற்காடு பகுதியில் இரைதேடும் நத்தை குத்தி நாரைகள், தற்போது பொன்னேரியை சுற்றியுள்ள கிராமங்களில் அதிகளவில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன.இவை நீர்நிலைகளில் இருக்கும் நத்தைகளை லாவகமாக பிடித்து உட்கொள்கின்றன. பொன்னேரியை சுற்றியுள்ள கிராமங்களில் அதிகளவில் வெள்ளை கொக்குகளை கண்டு வந்த மக்கள் தற்போது, கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் நத்தைகொத்தி நாரைகளை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.பழவேற்காடு ஏரியில் நீர்இருப்பு குறைந்து, சதுப்பு நிலப்பகுதிகள் வறண்டு வருவதால், நத்தைகுத்தி நாரைகள் இரைதேடி வெளியிடங்களுக்கு வருவதாக கூறப்படுகிறது.
19 hour(s) ago
20 hour(s) ago