உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெல் கொள்முதல் இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம்

நெல் கொள்முதல் இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம்

திருவள்ளூர்,:சொர்ணவாரி பருவத்தில் நெல் கொள்முதல் செய்ய, இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில், நவரை மற்றும் சொர்ணவாரி பருவ நெல் கொள்முதல் செய்ய, நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நவரை பருவ நெல் அறுவடை பருவத்தில் 2023-- -24ல், தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் 61, இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் - 4 என, மொத்தம் 65 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் அரசு கட்டடங்களில் மட்டும் திறக்கப்பட்டது. இதுவரை, 6,236 விவசாயிகளிடம் இருந்து, 40.77 கோடி கிலோ நெல் கொள்முதல் செய்யப்பட்டது. சொர்ணவாரி பருவத்தில் இதுவரை 58,460 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது. அறுவடை பருவம் துவங்கியதும், நேரடி நெல்கொள்முதல் செய்ய, 14 ஒன்றியங்களிலும், இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.மேலும், குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் கீழ் பச்சைப்பயறு 486 விவசாயிகளிடமிருந்து, 4.89 லட்சம் கிலோ கொள்முதல் செய்யப்பட்டு, 4.19 கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை