உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆர்.பி.எப்., ஆபீசில் பெண் தற்கொலை பலாத்காரம் செய்த டீ மாஸ்டர் கைது

ஆர்.பி.எப்., ஆபீசில் பெண் தற்கொலை பலாத்காரம் செய்த டீ மாஸ்டர் கைது

எழும்பூர்,:சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆர்.பி.எப்., இன்ஸ்பெக்டர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் போலீசார் ஓய்வு எடுக்கும் அறை உள்ளது. கடந்த 17ம் தேதி, அந்த அறை உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.சந்தேகமடைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ஜன்னல் ஓரம், தேசியக் கொடியின் கயிற்றில் 40 வயது பெண் ஒருவர், துாக்கிட்டு பிணமாக இருந்தார். புகாரின்படி எழும்பூர் போலீசார் விசாரணை நடத்தினர்.ஆதரவற்ற நிலையில் இருந்த அடையாளம் தெரியாத அந்த பெண், சில நாட்களாக எழும்பூர் ரயில் நிலையத்தில் சுற்றி திரிந்துள்ளார். சம்பவத்தன்று பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளில், அந்த பெண்ணுடன், மற்றொருவர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று அந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் திருச்சி, மணப்பாறையை சேர்ந்த கருப்பையா,50, என தெரிந்தது. தாம்பரம், சானட்டோரியத்தில் தேநீர் கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்துள்ளார். எழும்பூர் ரயில் நிலையம் வந்த கருப்பையா, தனியாக சுற்றித் திரிந்த அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து அந்த பெண் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துக்கொண்டது விசாரணையில் தெரிந்தது. அந்த பெண் யாரென போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி