உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பேட்டரி விழுங்கிய சிறுவன்

பேட்டரி விழுங்கிய சிறுவன்

திருத்தணி:திருத்தணி அடுத்த விநாயகபுரம் பகுதி சேர்ந்த வெற்றியழகன் மகன் ரோகித் கிருஷ்ணா, 4. இவர் திருத்தணியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி., படித்து வருகிறார். நேற்று பள்ளிக்கு வந்த மாணவன், மதியம், கை கடிகாரத்திற்கு பயன்படுத்தும் சிறிய பேட்டரியை வாயில் போட்டுக் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக பேட்டரியை விழுங்கியுள்ளார்.ஆசிரியர்கள் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர் சிகிச்சைக்காக சென்னை குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி