உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிறு மழைக்கே நிரம்பும் பெரிய ஏரி துார்வார மாநெல்லுார் விவசாயிகள் எதிர்பார்ப்பு

சிறு மழைக்கே நிரம்பும் பெரிய ஏரி துார்வார மாநெல்லுார் விவசாயிகள் எதிர்பார்ப்பு

கும்மிடிப்பூண்டி: மழைக்காலங்களில், ஆந்திர மாநிலம் சத்தியவேடு காடுகளில் இருந்து வரும் மழைநீர், கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே தமிழக எல்லைக்கு உட்பட்ட மாநெல்லுார் பெரிய ஏரியை வந்தடைகிறது. அதன்பின், எளாவூர் ஏழு கண் பாலம் வழியாக, 9 கிலோமீட்டர் கால்வாயை கடந்து கடலில் கலக்கிறது. ஒவ்வொரு ஆண்டு மழைக்காலங்களில், வினாடிக்கு 753 கனஅடி நீர், இதுபோன்று வீணாக கடலில் கலப்பதாக நீர்வளத் துறையினர் தெரிவிக்கின்றனர்.கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள மிக பெரிய ஏரிகளில் ஒன்றான மாநெல்லுார் ஏரி, 296 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியின் நீர் பாசனத்தை நம்பி, 495 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வரை, தொடர்ந்து பல நாட்களாக மழை பெய்தால் மட்டுமே ஏரி நிரம்பி வழிந்து, கால்வாய் வழியாக கடலில் கலக்கும்.ஆனால், 10 ஆண்டுகளாக இரு நாட்கள் மழை பெய்தால் கூட, ஏரி நிரம்பி வழியும் நிலையில் உள்ளது. நீர்வளத் துறையின் முறையான பராமரிப்பின்றி ஏரியின் பல பகுதிகள் துார்ந்து போய் மணல் திட்டுகள் போல் காட்சியளிக்கின்றன. இதனால், கோடை காலங்களில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, ஏரியை அகலப்படுத்தி, துார் வாரி கரையை பலப்படுத்தி, முறையாக பராமரித்தால், மழைக்காலங்களில் தண்ணீர் வீணாகாமல் சேமிக்க முடியும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ