உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பள்ளத்தில் தவறி விழுந்தவர் பலி

பள்ளத்தில் தவறி விழுந்தவர் பலி

கும்மிடிப்பூண்டி, : சென்னை, எண்ணுார் அடுத்த தாழங்குப்பத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ், 33; மீனவர். கும்மிடிப்பூண்டி அருகே சின்னமாங்கோடு மீனவ கிராமத்தில் நடந்த உறவினர் இறுதி சடங்கிற்கு நேற்று முன்தினம் சென்றார். குடிபோதையில் வீடு திரும்பிக்கொண்டிருந்த அவர், கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையம் எதிரே, கால்வாய்க்கு வெட்டிய பள்ளத்தில் தவறி விழுந்தார்.பின், அதிலிருந்து தானாக எழுந்து பள்ளத்தின் அருகே சுயநினைவின்றி கிடந்தார். அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின்படி, விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதனையில் உயிரிழந்தது தெரிந்தது. கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ