உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பருப்பு மூட்டையுடன் வேன் மாயம் 2 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

பருப்பு மூட்டையுடன் வேன் மாயம் 2 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

மணவாள நகர்:கடம்பத்துார் ஒன்றியம் போளிவாக்கம் ஊராட்சி வெற்றி நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர், 53. இவர், தனது வீட்டிலேயே பருப்பு குடோன் வைத்து, கடைகளுக்கு சப்ளை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் மதியம் 1:30 மணிக்கு, வீட்டின் முன், 65 பருப்பு மூட்டைகளுடன் 'பொலீரோ மேக்ஸி டிரக்' சரக்கு வாகனத்தை சாவியுடன் நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றார். அப்போது, திடீரென வாகனத்தை மர்மநபர் ஒருவர் வாகனத்தை எடுத்து சென்றார். வாகனத்தின் சத்தம் கேட்டு பாஸ்கர் வெளியே வந்து பார்த்த போது, வாகனம் மாயமானது தெரிய வந்தது. இதுகுறித்து, பாஸ்கர் கொடுத்த புகாரின்படி, மணவாள நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மேலும், சரக்கு வாகனம் சென்ற ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் பின்தொடர்ந்து சென்றனர். ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் உள்ள பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், 'இன்னோவா' கார் மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் அளித்த தகவலின்படி, மணவாள நகர் போலீசார் விரைந்து சென்று பருப்பு மூட்டைகளுடன் சரக்கு வாகனத்தை இரண்டு மணி நேரத்தில் மீட்டு, கோயம்புத்துார், குனியமுத்துாரைச் சேர்ந்த ஜெயலாபூதின், 28, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை